சோழன் புக் ஆஃப் வேர்ல்ட் ரெக்கார்ட்
.jpeg)
நமது ரூபி பள்ளியில் பல்வேறு பள்ளிகளுக்கு இடையே நடத்தப்பட்ட சாதனையாளர்கள் நிகழ்வில் நம் பள்ளி மாணவர்கள் ஒரு மணி நேரத்தில் அதிக எண்ணிக்கையிலான திருக்குறளை பனை ஓலையின் மீது எழுதி சாதனை படைத்துள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக நமது ரூபி பள்ளியின் தாளாளர் முனைவர் .திரு. சுகுமார் ஐயா அவர்களும், பள்ளியின் முதல்வர் திருமதி .கற்பக ஜோதி அவர்களும், திருமதி. ஷர்மிளா ராம் (ஆனந்த் கல்வியின் நிறுவனர்)மற்றும் நமது ரூபி பள்ளியின் டிரஸ்டி. திரு. சண்முகம் ஐயா அவர்கள் மாணவர்களுக்கு வாழ்த்துரை வழங்கி தொடங்கி வைத்தனர்.
மேலும் இணை ஸ்பான்ஸர் திரு. என். ராஜன் PSLF.LMF, திரு.ஆர் ஜே ராஜேஷ்குமார், திரு. ஆர் கோபால்கிருஷ்ணன்,திரு .ஜே ரவீந்திரன், திரு என் பிரகாஷ் ஆகியோர் இணைந்து விழாவினை சிறப்பித்தனர்.
இதில் 38 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அதில் 15 மாணவர்கள் பெருவாரியான திருக்குறளை ஓலைச்சுவடியில் எழுதி வெற்றி பெற்றுள்ளனர் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.